கொழும்பு, வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புகளில் பெருமளவு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைஸ்ரீ ஜயவர்தனபுர முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் (STF) கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார். வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்குளி, சமித்புர பகுதியில் 147 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் சமித்புர பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

.jpg)