நாமல் ராஜபக்ஷ உரை நிகழ்ச்சிகள் இங்கிலாந்தில் ரத்து !!

Author
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ஷவின் இந்த நிகழ்வுக்கு ஐக்கிய இராச்சியம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் ரத்து

நாமல் ராஜபக்ஸ , பெப்ரவரி மாத இறுதியில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒக்ஸ்போர்ட் ஒன்றியம் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியம்(Cambridge Union) ஆகிய மாணவர் சங்கங்களில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக பிரித்தானிய வாழ் தமிழ் புலம்பெயர் அமைப்புகளும், ஆதரவாளர்களும் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை இணைந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தன.

அதில், நாமல் ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டங்களின் விளைவாக, இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனில் நாமலின் நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top