குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் வீசா வழங்கல் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைகளம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளது.
கணினி கட்டமைப்பில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் வீசா வழங்கும் சகல சேவைகளும் நிறுத்தப்பட்டனஇந்தநிலையில் அதனை சீரமைப்புக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, அதன் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

