48 மணிநேரக் கெடு புஸ்வாணம்! ஈரானுடனான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்: சமாதானமா? அல்லது மாபெரும் சதியா?
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணிநேர இறுதி எச்சரிக்கை உலகையே போர் பதற்றத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், ட்ரம்ப் தற்போது தனது நிலைப்பாட்டிலிருந்து சடுதியாகப் பின்வாங்கியுள்ளார்.
ட்ரூத் சோஷியலில் ட்ரம்பின் புதிய அறிவிப்பு:
தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளமான 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) ஊடாக, ஆங்கிலத்தில் முற்றுமுழுதாகப் பெரிய எழுத்துக்களில் (All Caps) ட்ரம்ப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "மத்திய கிழக்கில் எமது பகைமைகளை முற்றுமுழுதாகத் தீர்ப்பது (complete and total resolution of our hostilities) தொடர்பாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் நல்ல மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் (very good and productive conversations) இடம்பெற்று வருவதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.5 நாள் ஒத்திவைப்பு:
மேலும் அவர் அந்தப் பதிவில், "இந்த ஆழமான மற்றும் விரிவான பேச்சுவார்த்தைகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஈரானிய மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு (postpone any and all military strikes for a five day period) 'போர் திணைக்களத்திற்கு' (Department of War) நான் உத்தரவிட்டுள்ளேன். இது தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்து அமையும்" எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். வழமையாகப் 'பாதுகாப்புத் திணைக்களம்' (Department of Defense) எனக் குறிப்பிடும் ட்ரம்ப், இம்முறை 'போர் திணைக்களம்' எனப் பயன்படுத்தியுள்ளமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பின்னணியில் உள்ள பொருளாதார மற்றும் இராஜதந்திர நெருக்கடிகள்:
ட்ரம்ப் இவ்வாறு திடீரெனப் பின்வாங்கியதற்கு ஈரானின் கடுமையான பதிலடி எச்சரிக்கைகளே காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "அமெரிக்கா தாக்கினால் வளைகுடா நாடுகளில் உள்ள நீர் விநியோக நிலையங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு உலை (UAE nuclear plant) உள்ளிட்டவை அழிக்கப்படும்" எனவும், தரைவழி ஆக்கிரமிப்பு நடந்தால் "ஒட்டுமொத்தப் பாரசீக வளைகுடாவிலும் கண்ணிவெடிகள் (mine entire Persian Gulf) புதைக்கப்படும்" எனவும் ஈரானியப் படைகள் மாபெரும் எச்சரிக்கையை விடுத்திருந்தன.
அத்துடன், சர்வதேச எரிசக்தி முகவரியின் (IEA) தலைவர் ஃபாத்திஹ் பிரோல் (Fatih Birol), "இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியானது 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி மற்றும் உக்ரைன் போரை விடப் பல மடங்கு மோசமானது" என எச்சரித்திருந்தார். இவ்வாறான பூகோள அழுத்தங்கள் மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளின் வெளிப்படையான கண்டனங்களைத் தொடர்ந்தே ட்ரம்ப் இந்த 5 நாள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்துச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் (crude futures) சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tubetamil24X7 #Tubetamil #DonaldTrump #USvsIran #StraitOfHormuz #IranWar2026 #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #TamilNewsToday
