ஈரான் விமான நிலைய தாக்குதல் – பல இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல் !!!

Author
0

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது,இதேவேளை தாக்குதல் நடந்த விமான நிலையத்தில் பல விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து ஒரு பெரிய புகை மேகம் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் பல இடங்கள் எதிரிகளால் குறிவைக்கப்பட்டிருப்பதை ஈரானிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.இஸ்ரேல் முன்னதாக மார்ச் 4 ஆம் திகதி விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது, ஹெலிகொப்டர் உற்பத்தி பிரிவு உட்பட இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல அமைப்புகளை அழித்தது.இருப்பினும், காலை இடம்பெற்ற தாக்குதலில் விமான நிலையத்தின் எந்த இடங்கள் பாதிக்கப்பட்டன என்பது இன்னும் தகவல்கள் வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top