ஈரான் தலைமை குறித்து ட்ரம்ப் திடீர் அறிவிப்பு !!!

Author
0

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத்தலைவர் கமேனியை தொடர்ந்து புதிய உச்சத்தலைவரை நானே தீர்மானிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.அயத்துல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் புதல்வரான 56 வயதுடைய மொஜ்தாபா கமேனியை, புதிய உச்ச தலைவராக நியமிக்க ஈரான் தயாராகி வரும் நிலையில்; டொனல்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை எனக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன். தற்போது டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிகமாகப் பணியாற்றுகிறார்.அவருக்கு என்னுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கமைய ஈரானின் உச்ச தலைவர் யாராக இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன் என டொனல்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top