உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு முன்னறிவிப்பு !!!

Author
0

மத்திய கிழக்கில் போர் நடந்து வரும்வேளையில் முக்கிய கடல் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உலகில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீரிணையை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த கப்பல்கள் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான கப்பல்கள் புறப்பட முடியாமல் தவித்து வருகின்றன.இதனால் பல நாடுகளுக்கு மசகு எண்ணை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகின்றது. உலக அளவில் எரிபொருள் விலையுயர்வு ஏற்படலாமென தெரிகிறது.இதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணை விநியோகத்தை நம்பியுள்ள பாகிஸ்தானில் நள்ளிரவில் பெட்ரோல் -டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top