மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களும் சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டல்களும் விசேட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து தொடர்புடைய பிரிவுகளுக்கும், குறிப்பாக சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு, வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருகை தரும் முக்கிய இடங்களிலும் ஹோட்டல்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு தூதரகங்கள்
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமடைந்த சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரக வளாகங்களை முற்றுகையிடும் முயற்சிகளையும் கட்டுப்பாட்டை இழக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களையும் தடுக்க முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறினர்.
