மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த வான்பரப்பைத் தவிர ஏனைய அனைத்து வான்வழிப் பயணங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில வான்பரப்புகள் வரையறுக்கப்பட்ட விமானப் பயணங்களுக்கு மாத்திரமே தற்போது திறக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவு 12 மணி வரை ரத்து
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானப் பயணங்களும் இன்று (02) நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய இரவின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும்.
