ஏப்ரல் 29: "
"காங்கிரஸ் அனுமதியின்றி நடந்த போரால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் மாபெரும் அளவில் வீணடிப்பு! - முதல்முறையாகப் போர்ச் செலவுகளை அப்பட்டமாக ஒப்புக்கொண்ட அமெரிக்கப் பாதுகாப்புத்துறை!" 
அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போரால் அமெரிக்காவிற்கு எவ்வளவு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை, அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பென்டகன் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அதிரவைத்துள்ளது! 


பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ஈரானுடனான இந்த மாபெரும் போருக்காக அமெரிக்க ராணுவம் இதுவரை சுமார் 25 பில்லியன் டாலர்களை ($25 billion) செலவிட்டுள்ளதாகப் பென்டகனின் உயர்மட்ட நிதி அதிகாரி புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
