நாவற்குழி விவகாரம் – பிக்கு கைது, அரசியல் சர்ச்சை !!!

Author
0

யாழில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் கைதான நாவற்குழி விகாரை பிக்கு கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்னின்று செயற்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி நாவற்குழி விகாரையில் பிக்கு ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை திட்டமிட்ட ஒரு சதி என தென்னிலங்கையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தென்னிலங்கையில் பரவலாக குற்றச்சாட்டுக்கள்

ஒரு மதத் தலத்திற்குரிய ஆடை ஒழுக்கத்தை மீறி பிரவேசிக்க முயன்ற யுவதிக்கு அறிவுறுத்தியதற்காக, பிக்கு மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பிக்கு கைதான சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயலாளராகக் கடமையாற்றும் சயந்தன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.எவ்வித தவறும் செய்யாத பிக்குவை விகாரையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. அது வடக்கிலிருந்து பிக்குகளைத் தந்திரோபாயமாக வெளியேற்றும் ஒரு முயற்சி எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் அநுரகுமாரவும் அரசாங்கமும், இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன்  ஒரு மதத்தின் எழுச்சியும் விழிப்புணர்வும் அந்த மதம் சார்ந்த மக்கள் குறைவாக வாழும் பகுதிகளிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.                                 பிக்குகளை வடக்கிலிருந்து வெளியேற்றி, அங்கு தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உறுதிப்படுத்த இந்த அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. நாவற்குழி விகாரையில் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட பிக்கு, மீண்டும் அந்த விகாரையிலேயே தங்கித் தனது மதப் பணிகளைத் தொடர்வதற்கான சட்டப் பூர்வமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.இதற்காகப் புத்த சாசன அமைச்சருக்கு இரண்டு வார கால அவகாசத்தை வழங்குகிறோம்.அந்த காலப்பகுதிக்குள் பிக்குவுக்கு நீதி வழங்கப்பட்டு, அவர் மீண்டும் நாவற்குழி விகாரைக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படாவிட்டால், மகா சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து பௌத்த சாசன அமைச்சுக்கு முன்னால் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top