யாழில் சீமான் ஆதரவு – மாட்டுவண்டி ஊர்வலம் !!!

Author
0

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையிலான வேட்பாளர்கள் வெற்றிபெறவேண்டும் என அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பாணம் மானிப்பாயில் மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றது.இதன்போது செந்தமிழன் சீமானின் உருவப்படம் கட்சி சின்னமும் தாங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் ஏர் கலப்பையினையும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.மானிப்பாய் பிரதேச சபை முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் மருதடி பிள்ளையார் ஆலயம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் பிரதேச சபை முன்றலை அடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top