மே 3: "அமெரிக்காவின் 9 அம்ச கோரிக்கைக்கு ஈரானின் நேரடிப் பதிலடி!" 

"லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம்! - பாகிஸ்தான் மத்தியஸ்தர் மூலம் அமெரிக்காவிடம் புதிய நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்!"
அமெரிக்கா முன்பு முன்வைத்த 9 அம்சத் திட்டத்திற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த 14 அம்சங்களைக் கொண்ட புதிய ஆவணத்தைச் சமர்ப்பித்துள்ளது.
ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான உத்தரவாதம் மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து அமெரிக்க ராணுவப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஈரான் போர் மட்டுமின்றி, "லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என இந்த ஆவணம் வலியுறுத்துகிறது.
முடக்கப்பட்ட ஈரானிய நிதிச் சொத்துகளை விடுவித்தல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திக்கான (Strait of Hormuz) "புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப்படுத்துதல்" ஆகியவையும் இத்திட்டத்தில் கோரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் குறித்து ஈரானிய அதிகாரிகள் இன்னும் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், இத்திட்டத்தை விரைவில் பரிசீலிக்க உள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "இது (எங்களுக்கு) ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை," எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
