மே 8: "ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்த பயங்கர மோதல்!" 

"அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரானின் சரமாரித் தாக்குதல்! - ஈரானுக்கு இது ஒரு 'செல்லத் தட்டல்' என டிரம்ப் அதிரடி!"
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 3 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் பயங்கரத் தாக்குதலை நடத்தியதையடுத்து, ஈரானின் இரண்டு முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு மாத காலப் போர்நிறுத்தம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது! 


ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 'யுஎஸ்எஸ் ட்ரக்ஸ்டன்' (USS Truxtun), 'யுஎஸ்எஸ் மேசன்' (USS Mason) மற்றும் 'யுஎஸ்எஸ் ரஃபேல் பெரால்டா' (USS Rafael Peralta) ஆகிய 3 அமெரிக்கக் கடற்படை அழிப்புக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்கப் படைகள் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் மூலம் பல மணிநேரம் போராடி இந்தத் தாக்குதலை முறியடித்தன. இதில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
ஈரானின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமைந்துள்ள ஈரானின் 'பந்தர் அப்பாஸ்' (Bandar Abbas) மற்றும் 'கேஷ்ம்' (Qeshm) ஆகிய இரண்டு முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் குறிவைக்கப்பட்டன.
