சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி மயிலங்காட்டு பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
மருந்துகளை விற்பனை செய்யும் முகவர்களே இவருடன் தொடர்பிலிருந்து இந்த போதை மாத்திரைகளை கொடுப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்காக எடுத்துச் செல்லும்போது சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடமையிலிருந்து ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

