கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு பலியான குடும்பஸ்தர்!

Author
0

 கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் மாவில்மட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது வீட்டின் முன் பாதுகாப்பு வேலியைப் பழுதுபார்ப்பதற்காகப் பயன்படுத்திய கிரைண்டரில் கழுத்து அறுபட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top