மே 6: "ஒரே பக்க குறிப்பாணையில் கையெழுத்து!"
"மிக விரைவில் போர் முடிவடையும்! - ராய்ட்டர்ஸ் (Reuters) மற்றும் ஆக்ஸியோஸ் (Axios) ஊடகங்கள் வெளியிட்ட அதிரடித் தகவல்!"
கடந்த சில மாதங்களாக வளைகுடாப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடிப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகப் பெரும் ஆறுதலான தகவல் தற்போது வெளியாகியுள்ளது! 


இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய வட்டாரம் ஒன்று, "நாங்கள் இதை மிக விரைவில் முடிக்கப் போகிறோம். நாங்கள் ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம்," எனத் தெரிவித்துள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
முன்னதாக, அமைதி ஒப்பந்தம் குறித்து 'ஆக்ஸியோஸ்' ஊடகம் வெளியிட்டிருந்த தனிப்பட்ட அறிக்கையையும் இந்தத் தகவல் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒரு பக்க ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
