ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியில் 134 மைல்கல் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (01) மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேர் ஹொரவபொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)