முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக, அது கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்பது குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியான முடிவுக்கு வர முடியும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கருத்துப்படி, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அரச இரசாயன பகுப்பாய்வின் பெறுபேறுகள் மற்றும் பிற தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மரணத்திற்கான காரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
