உலகப் புகழ்பெற்ற பிரிட்டானியா (Britannia) நிறுவனம், தமிழர்களின் பெருமைமிக்க இலக்கியமான திருக்குறளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தனது Milk Bikis பிஸ்கட்களில் திருக்குறள் வார்த்தைகளை அச்சடிக்கும் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, "கற்க கசடறக் கற்பவை கற்றபின்..." போன்ற திருக்குறள் வரிகளை பிஸ்கட்களின் மேல் அச்சிடுவதற்காக தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை நிறுவனம் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்கள் நீடித்த ஆய்வு மற்றும் முயற்சிகளுக்குப் பின்னரே இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், இதனுடன் "திருக்குறள் சேலஞ்ச்" என்ற சிறப்பு போட்டியையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
