நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னால் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்காலிக சிறைச்சாலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலை மற்றும் காலியில் உள்ள மகாமோதர உள்ளிட்டவற்றை சில மாதங்களுக்கு தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போது சிறைகளில் இருக்கும் நெரிசலுக்கு தீர்வு கண்ட பிறகு, தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த இரண்டு சிறைச்சாலைகளும் அகற்றப்படும்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு பின்னால் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.
இதற்குரிய விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விசாரணைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே எங்களால் உறுதியாகக் கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
