நேபாளம்–சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனவர்களில் 469 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் திபெத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரழிவு
கடந்த 26ஆம் திகதி, பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “வான்டர்” (Vantor) என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.
