ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

Author
0
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
🔎 தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
ரவி கருணாநாயக்க விசாரணைக்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அப்போது சமூகமளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்குச் சென்றிருந்த போதிலும், அவரை அங்கு சந்திக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வேறு ஒரு திகதியில் முன்னிலையாக அனுமதிக்குமாறு அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 அதற்கமைய, இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரவி கருணாநாயக்க தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
⚖️ இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top