ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்
குறித்த வானூர்தி கொள்முதல் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன்படி ஆம் ஆண்டின் ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்

.jpg)