ஹாங்காங்கில் 293 பயணிகளுடன் விமானம் விபத்து!

TubeTamil News
0

 ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை

அதன்படி, விமானத்திலிருந்து பயணிகளை அப்புறப்படுத்தும் பூர்வாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் போது ஏற்பட்ட விபத்தில் அந்த பயணிகள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் 09 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி பயணிக்கவிருந்த இந்த விமானத்தில் 17 பணியாளர்களும் 293 பயணிகளும் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top