கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனினும் இது உடனடியாக நடக்கக் கூடிய காரியம் அல்ல என்று தெ ஆப்டர்னூன் (the afternoon) என்ற இந்திய செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
எனினும் இது விடயம் குறித்து இந்தியப் பிரதமரும், இலங்கையின் ஜனாதிபதியும் விவாதித்திருக்க வாய்ப்பில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.
என்றாலும், தமிழக கடற்றொழிலாளர் நலன் பற்றிப் பேசியதே பெரிய விடயமாகும். முதற்கட்டமாக தமிழக கடற்றொழிலாளர்கள் அச்சமின்றி கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடிய சூழ்நிலை உருவானால் அது இந்திய பிரதமரின் இமாலய சாதனையாகும் என்று ஆப்டர்னூன் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழக கடற்றொழிலாளர்களுக்காக பிரதமர் மோடி குரல் கொடுப்பது வெறும் அரசியலாக மட்டும் இருக்க முடியாது என்றும் ஆப்ரட்னூன் குறிப்பிட்டுள்ளது
