‘சந்திரயான் - 3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ நாளைய தினம் (23.08.2023) நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ரஷ்யாவின் 'லூனா - 25' திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது.
'லூனா - 25' விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது.
ரஷ்யாவின் முயற்சி
இதனால் இந்தியாவின் 'சந்திரயான் - 3' விண்கலத்துக்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி நிறைவேறவில்லை.
இந்த நிலையில் ரஷ்யா தவறவிட்டதை 'சந்திரயான் - 3' விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.