தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..

tubetamil
0

 நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.99 ரூபாவிலிருந்து 314.72 ரூபாவாகவும் விற்பனை விலை 326.88 ரூபாவிலிருந்து 328.02 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

வர்த்தக வங்கிகளில் ரூபாவின் பெறுமதி..




இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (15.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை முறையே 312.88 மற்றும் 3328.27 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 311.74 ரூபாவாகவும் விற்பனை விலை 326 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 315 மற்றும் 327 ரூபாவாக மாறாமல் உள்ளது.   

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top