நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றம்!!!

tubetamil
0

 நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவகங்களில் தண்ணீர் நுகர்வு அதிகமாக உள்ளதால், தண்ணீர் கட்டணத்தை திருத்தியமைப்பதன் மூலம் அதிகரித்த தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை உயர்த்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.


சமூர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மட்டுமே ஓரளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top