மன்னாரில் பயறு செய்கையில் அதிகளவு விளைச்சல்! நிலவரத்தை பார்வையிட்ட காதர் மஸ்தான் (Photos)

tubetamil
0

 மன்னார் மாவட்டதில் பயறு பயிர்ச்செய்கையானது இம்முறை அதிகளவு விளைச்சல் அறுவடையை பெற்றுத்தந்துள்ள நிலையில் இதனை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பார்வையிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது நேற்று (28-08-2023) பார்வையிட்டுள்ளார். 

பயறு செய்கை 

விவசாய செய்கை மூலம் சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சினால், மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் விவசாயிகளுக்கு பயறு நடுகைக்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னாரில் பயறு செய்கையில் அதிகளவு விளைச்சல்! நிலவரத்தை பார்வையிட்ட காதர் மஸ்தான் (Photos) | Cultivation Of Pulses In Mannar

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் சுமார் 1600 ஹெக்டயர் நிலப்பரப்பில் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள நெல் வயல்களில் மாற்றுப்பயிராக பயறு பயிரிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் வட்டுப்பித்தான் மடு பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வரும் குறித்த பயிர் செய்கையை நேற்று பார்வையிட்டுள்ளார். 

பயறு விலை நிலவரம்

இதன் அடிப்படையில் குறித்த அறுவடை மூலம் மன்னார் மாவட்டத்தில் 900 மெட்ரிக் தொன் பயறு, விற்பனைக்காக உள்ள நிலையில் ஒரு கிலோகிராம் பயறு 825 ரூபாய் தொடக்கம் 850 வரை விற்கப்பட உள்ளது.

மன்னாரில் பயறு செய்கையில் அதிகளவு விளைச்சல்! நிலவரத்தை பார்வையிட்ட காதர் மஸ்தான் (Photos) | Cultivation Of Pulses In Mannar

குறித்த பயிர்ச்செய்கை மூலம் பெண்களுக்கு நாளாந்தம் சுமார் 5000 ரூபா வருமானத்தை தரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top