இந்திய பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வராமைக்கு சுமந்திரனே பதில் கூற வேண்டும்: விக்னேஸ்வரன்

keerthi
0

 
இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பதனை சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


எனக்கு தெரிந்தவரையில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதமானது இன்னும் சென்றடையவில்லை என்று தகவல் கிடைத்தன.


இந்திய பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பது சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் எனில் எதற்காக இந்திய பிரதமர் அந்த கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும்.


சுமந்திரன் சொல்வதுபோல் கடிதம் இந்திய பிரதமரிடம் சென்றடைந்திருந்தால் அதற்குரிய பதில் கடிதத்தினை இந்தியப் பிரதமர் அனுப்பாததற்கு ஏதேனும் காரணம் ஒன்று இருக்க வேண்டும்.


என்னிடம் சொல்லப்பட்டது என்னவெனில் அது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதாகவும் பிரதமரிடம் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது.


அத்தோடு இந்திய பிரதமருடைய காரியாலயத்திற்கு செல்லும் கடிதங்கள் யாவற்றிற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதில் எழுதப்படும் எனக் கூறப்பட்டது.


அவ்வாறு பதில் கிடைக்காமையை வைத்துதான் இந்திய பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம் செல்லவில்லை என கூற வேண்டும்.


நாங்கள் எல்லோரும் மனதளவில் பிரச்சினை உள்ளவர்கள் தானே, ஆசிரியரும் மாணவரும் என நானும் சுமந்திரனும் இணைந்து சிகிச்சை பெறவேண்டிய அவசியம் உள்ளது போல் தெரிகிறது எனத் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top