பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான 3 தீவிரவாதிகள் கொலை...!

keerthi
0

 




 பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் முசாமில், நீமூர் ரஹ்மான் உள்ளிட்ட 3 பேர் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


பாகிஸ்தானை தளமாகக் கொண்டு பல்வேறு இந்திய எதிர்ப்பு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரை தனிநாடாக பிரிக்க வேண்டும்; ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்.அத்தோடு  இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும்; இந்தியாவில் இஸ்லாமிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்கிற தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றன..


மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவி மும்பை தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை இந்த இயக்க பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து ஊடுருவி ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் இந்த பயங்கரவாதிகள் 'நடவடிக்கை'களாக கொண்டிருக்கின்றனர்.


இத்தகைய இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அண்மைக்காலமாக பாகிஸ்தானில் அடுத்தடுத்து மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அத்தோடு 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் மூளையாக இருந்த ஹபீஸ் சய்யீத் மகன் தொடங்கிய கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். சிலர் தலைகள் வெட்டப்பட்டு சடலங்களாக மட்டும் மீட்கப்பட்டிருக்கின்றனர்.


இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் முசாமில், நீமூர் ரஹ்மான் உள்ளிட்ட 3 பேர் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட் நகரத்தில் கோக்ரான் சவுக் என்ற பகுதியில் இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள், காரில் இருந்த 3 பயங்கரவாதிகளையும் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


இத்தகைய தாக்குதல்களால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பு, ராணுவத்தினரிடம் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அத்தோடு பலுசிஸ்தான் மாகாணத்தில் தனிநாடு கோரும் பயங்கரவாத இயக்கத்தினர் இத்தகைய படுகொலைகளை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top