பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபரீதத்தால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி..!

keerthi
0

 



வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதிய உணவுவேளையின் போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் குறித்த நீர்குழாய்க்கு அருகில் கைகழுவுவதற்க்காக சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


குறித்த நீர்குழாய் சுவர் நீண்ட காலமாக கவனிப்பாரற்று இருந்ததாகவும், உடைந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.


இவ்வாறுஇருக்கையில் சம்பவமறிந்து, பாடசாலைக்கு விரைந்த மாணவர்களின் பெற்றோர் சம்பவம் தொடர்பிலான தகவல்களை பெற முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரலவழைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் உயிரிழந்த சிறுமிக்கு இன்று பிறந்த தினம் எனவும், அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.இவ்வாறுஇருக்கையில்  பொலிஸார் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது, அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்புரிவதாகவும் உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.


முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் மூன்று மாணவர்களும் இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top