தந்தையின் மரண சடங்கிற்காக சென்ற மகன் பரிதாபமாக பலி

keerthi
0

 





தென்னிலங்கையில் தந்தை உயிரிழந்த நிலையில் மரண சடங்கை மேற்கொள்வதற்காக ஆவணங்களை பெறச் சென்ற இளம் மகன் உயிரிழந்துள்ளார்.


புலத்சிங்கள பிரதேசத்தில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்த தந்தையின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள இறப்புச் சான்றிதழ் பெறச் சென்ற மகனே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.


புளத்சிங்கள பிரதேசத்தில் இருந்து ஹொரனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.


அங்கு மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.அத்தோடு 21 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top