வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்!

keerthi
0

 




களுத்துறை நகரின் மையப்பகுதியில் நேற்று (13) பிற்பகல் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.


மேலும் இவர் தனியார் பஸ் நடத்துனராக தொழில் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.


இத் தாக்குதலுக்கு உள்ளானவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான  நபர் களுத்துறை மாவட்ட செயலகத்தை நோக்கி ஓடிச் சென்று கீழே விழுந்துள்ளார்.


எனனும் இதையடுத்து, அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.


தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், களுத்துறை தெற்கு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top