யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு திங்கட்கிழமை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவத்தின் போது, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதாவது இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
