பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை

keerthi
0

 



திருப்பூர் பெரியகடை வீதியை சேர்ந்தவர் பல்கீஸ் பேகம் (வயது 31). இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முகமது அபுதாகீர் சேட் (44). இவர் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் தங்கியிருந்து ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். பல்கீஸ் பேகம், முகமது அபுதாகீர் சேட் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி பல்கீஸ் பேகம் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.


இவ்வாறுஇருக்கையில்  கடந்த 30-6-2019 அன்று காலை பல்கீஸ் பேகம் வீட்டுக்கு முகமது அபுதாகீர் சேட் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முகமது அபுதாகீர் சேட், கத்தியால் பல்கீஸ் பேகத்தை குத்திக்கொலை செய்தார். 


மேலும் இதுதொடர்பாக தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது அபுதாகீர் சேட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணைக்கொலை செய்த முகமது அபுதாகீர் சேட்டுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். 


இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், கணேசன் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top