டீக்கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது

keerthi
0

 



கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உள்ள பழைய டாஸ்மாக் கடை அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்து பலர் மது அருந்தி வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


தகவல்களின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பலர் அமர்ந்து கொண்டு மது பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. 


எனினும் அதன் அடிப்படையில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்ததாக நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியில் சேர்ந்த தினேத்( 39) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top