புதிய வீடு கட்டியுள்ள பிரபல சீரியல் நடிகை சரண்யா: வெளியான புகைப்படங்கள்..!

keerthi
0

 


சினிமா நடிகைகளை தாண்டி சின்னத்திரை நாயகிகளுக்கு தான் இப்போது ரசிகர்களிடம் மவுசு உள்ளது. சீரியல்களில் நடிப்பவர்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சீரியல் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக நிறைய போட்டோ ஷுட் நடத்தி அவர்களுக்கு நெருக்கமாகி வருகிறார்கள். 

 எனினும்  இப்போது ஒரு சீரியல் நடிகை பற்றிய சூப்பரான செய்தி தான் உலா வருகிறது, அதாவது செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக மாறிய சரண்யா துரடி ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார். 

அதாவது நடிகை சரண்யா பல போராட்டங்களுக்கு பிறகு தனது கனவு இல்லத்தை கட்டியுள்ளாராம். 

அத்தோடு தனது புதிய வீட்டில் முதல் கார்த்திகை தீபம் என ஸ்பெஷல் தினத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.









கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top