மீண்டும் இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

keerthi
0

 


நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 672,445.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 673,791 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 அத்தோடு 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 174,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,400 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top