54 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்..!!

tubetamil
0

 மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட 54 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


சேவை அவசியம் கருதி, வருடாந்த சுழற்சி முறைமையின் அடிப்படையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எஸ் சோமரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிளிநொச்சி, புத்தளம், களுத்துறை, மாத்தளை, கடுவளை, பூகொட, மாரவில, எல்பிட்டிய, மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நுவரெலியா, மட்டக்களப்பு, கேகாலை, ஹோமாகம, நீர்கொழும்பு, பண்டாரவளை, எல்பிட்டிய, பலப்பிட்டிய, மதவாச்சி, நொச்சியாகம, நாவுல, ஆணமடுவ ஆகிய நீதவான்களும் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எஸ் சோமரட்ன குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top