மாத்தறை – வெலிகம பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் சார்ஜன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, குழுவொன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகமொன்றை மேற்கொண்டு வேனொன்றில் தப்பிக்க முயற்சித்த போது பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.