போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது

keerthi
0


 ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (22.12.2023) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014 ஆம் ஆண்டின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரெனவும், இவர் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்றாத காரணத்தினால் இதுவரை பட்டம் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு    கண்டி, கண்ணொரு பிரதேசத்தில் ஹாஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அத்தோடு, குறித்த் சந்தேக நபரிடத்திலிருந்து 15 கிராம் நிறையுடைய ஹாஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவர் கண்டி- முறுத்தலாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும்     இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top