போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின்..!!

tubetamil
0

  ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரேன்  மீது போர் தொடுத்தது. அந்த போர் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை.

இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந் நிலையில் உக்ரேன்  மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளது.

இதையடுத்து உக்ரேன்  போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை.

உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டெம்பர் மாதம் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top