சபரிமலையின் வருவாய் மட்டும் இத்தனை கோடியா..?

keerthi
0

 


சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல மற்றும் மகர பூஜைகள் நடைபெறும் இந்தப் பருவத்தில், சபரிமலை கோயிலின் வருவாயை திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தப் பருவம் தொடங்கிய 39 நாள்களில் (டிச.25 வரை) ரூ.200 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

காணிக்கையாக கொடுக்கப்பட்ட சில்லரைகள் எண்ணப்படும்போது இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்த வருவாயான ரூ. 204.30 கோடியில் ரூ.63.89 கோடி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அரவணை பாயாசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும் அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடியும் ஈட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு   இந்த முறை 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெருக்கடியான மக்கள் திரள் இருந்தபோதும் தேவஸ்தானம் அதன் வரையறைக்குட்பட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தியதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top