இளைஞர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்..!!

tubetamil
0

 இளைஞர்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி இளைஞர்களை குழப்பும் அரசியல் கலாசாரம் எமது நாட்டில் காணப்படுகின்ற போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்


சஜித் பிரேமதாச நேற்று (16) பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர் சக்தியின் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றும் போது தெரிவித்தார்.

தனது வேலைத்திட்டம் பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

கல்வி முறையில் நல்ல மாற்றம் வர வேண்டும்,

இந்நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த தாம் எதிர்பார்ப்பதாகவும்,நாட்டிற்கு தரமான கல்வி முறை தேவை என்றும், அதில் குழந்தைப்பருவம், ஆரம்பப் பருவம், இடைநிலை, மூன்றாம் நிலை என நான்கு பகுதிகளாக உள்ள என்றும், இது முறையான கல்வி மாற்ற முறைக்குட்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சத்வதேச தொழிலாளர் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நவீன மற்றும் எதிர்கால கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் ஸ்மார்ட் வகுப்பறை, ஆங்கில மொழி மையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இதனூடாக ஸ்மார்ட் கல்வி, ஸ்மார்ட் பாடசாலை, ஸ்மார்ட் மாணவன், ஸ்மார்ட் இளைஞன், ஸ்மார்ட் குடிமகன், ஸ்மார்ட் நாடு உருவாகும் என்றும்,இதனை அடைய கல்வியில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், கிராமிய நகர கல்வி சமாந்தரமாக செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்ற புதிய திட்டம்,

இளைஞர்களும் தொழில்முனைவோராக செயல்படும் திறன்களை வளர்த்து,தொழில் ஒன்றை தொடங்குவதற்கான ஆரம்ப மூலதனத்தை அவர்களுக்கு வழங்கி,தேசிய உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முயற்சியாண்மையாளர்களை வலுப்படுத்தி வேண்டும் என்றும்,இளைஞர்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

இளைஞர்களை தொழில்முனைவோராக்கி முடிவெடுக்கும் உரிமையும் அபிவிருத்தி முன்னுரிமைகளை உருவாக்கும் உரிமையும் வழங்கப்படும் எனவும், கிராமம் மற்றும் நகரத்தின் தேவைகளை இளைஞர்களே தீர்மானித்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் முட்டை உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம்.

நமது நாடு முட்டையில் தன்னிறைவு அடையவில்லை என்றும், இதற்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும், இதனால் முட்டையைக் கூட வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும், இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியைக் கூட இழக்க நேரிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் முறையான முட்டை உற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டு, முட்டைத் தொழிலுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால்,உள்நாட்டில் முட்டைகள் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்யும் அதேவேளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும், நாட்டில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் இல்லாததும், தேவையான வசதிகளுடன் தேசிய உற்ப்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முட்டையில் தன்னிறைவு பெறுவது மட்டுமின்றி, குடிசை தொழிலை சிறு தொழிலாக மாற்றி, தொழில்முனைவோரை உருவாக்கி, முட்டை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி, அந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமான தீர்வுகளே நாட்டுக்கு தேவை,

கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவு வரையிலான கடல் பரப்பு நாட்டுக்கு சொந்தமானது என கூறப்பட்டாலும், அது முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், நாட்டில் நிதி இல்லையென்றால், கடல்சார் பொருளாதார முயற்சியாண்மைகளுக்கு (Blue Economy)கூட்டுத் திட்டங்கள் மூலம் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எம்மால் அடையலாம் என்றும், இவ்வாறான புதிய ஆக்கபூர்வமான தீர்வுகள் நாட்டுக்கு தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top