கிளி. புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்

keerthi
0

 District Media Unit  - Kilinochchi.




புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந் நிலையில், புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகள்  குறித்து  ஆராயும் நோக்கில் நேற்று(03) குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.


குறித்த விஜயத்தின் போது நன்னீர் மீன்வளர்ப்பு திட்டப் பணிப்பாளர், நெக்டா வடமாகாண பணிப்பாளர், பொறியியலாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.


இதன்போது, மீன் உற்பத்தி நிலையத்தின் வளர்ச்சியை மேலும் விணைத்திறனுடன்  மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


மாவட்ட ஊடகப் பிரிவு,

மாவட்ட செயலகம்,

கிளிநொச்சி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top