வற் வரி அதிகரிப்பின் தாக்கம் பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு..!!

tubetamil
0

 எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்(01.01.2024) நடைமுறைக்கு வரவுள்ள 18 வீத வற் வரி அதிகரிப்பின் காரணமாக அனைத்து பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

சுமார் 15 வீதத்தால் இவ்வாறு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருக்கும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இதற்கு பின்னர் 35 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

15 வீதமாக இருக்கும் வற் வரியை ஜனவரி முதல் 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன் அடிப்படையில், எரிபொருள் உள்ளிட்டவற்றிற்கும் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் பல்வேறு தொழிற்துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந்த நிலையில் பேருந்து கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top