பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்துப் பெண்..!!

tubetamil
0

 பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. 

பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு சிக்குண்டு கிடக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

அதேவேளை 2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top