யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (25.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சந்திரசேகரம் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் (24) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறுஇருக்கையில் நேற்றைய தினம்(25) அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றைய தினம்(26) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.